Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Saturday 10 October 2009

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்



வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும்


அன்பில் அநிருத்த பிரம்மராயர்



மதுராந்தகச் சோழன்


நந்தினி




வந்தியத்தேவன்

சோழ சாம்ராஜ்யம்

எடக்கல்
 


ஆதித்த கரிகாலச் சோழன்

சோழ சாம்ராஜ்ய கொடி
 
அட்டைப் படங்கள்
 
அட்டைப் படங்கள்
 
அட்டைப் படங்கள் - பெரிய பழுவேட்டயர்
 
விண்ணகரக்கோயில்
 

குந்தவையும் வானதியும்

நன்றி இளங்குமரன் ஐயா சிங்கப்பூர்

சுய விளம்பரம்

என்னைப் பற்றி பதிவுலகத்திற்கு...

மீனாட்சி சுந்தரம் என்ற பெயரை தாங்கிய நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டிப் புதூர் எனும் கிழக்கு குன்றுகளின் அடிவார நிழலில் அழகிய மலைச்சாரல் கிராமம் தான் நான் பிறந்த மண். பிறந்த வருடம் 1987. ஆண்டு 2004 வரை பள்ளிக் கல்வியினை அப்பகுதியின் பள்ளிகளில் பயின்று இளங்கலை திருச்சி தூய வளனார் கல்லூரி (St.Joseph’s College) (நான் படிச்ச கல்லூரியில் தான் அப்துல் கலாம் படிச்சாராம்..ஏன் நான் உட்கார்ந்த அதே பெஞ்ச் தான் அவரும் உட்கார்ந்தாராம் !!!) சேர்ந்து 2009-ல் முடிக்க மாட்டேன் திடமாக நம்பியிருந்த பட்டப்படிப்பினை முடிக்க வைத்தார்கள். இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டதை விட மனிதப் பண்புகள் சிறிது கற்றுக் கொள்ள வளனார் கல்லூரி வாய்ப்பு வழங்கியது. பதிவுலகத்தில் காலடி வைக்கும் இத்தருணத்தில் எமது கல்லூரியினை நன்றியுணர்வுடன் எண்ணி மகிழ்கின்றேன்.

பிறகு முதுகலை கல்விக்கு 2009 சூலை 14-ல் கடல் கடந்து சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் (National University of Singapore) எதிர்பார்த்த எதிர்பாராத வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இளங்கலை படிப்பிற்கு மாறாகவும் விருப்பத்திற்கு எதிராகவும் பொருளாதார முன்னேற்றம் கருதியும் வெளியுலக அனுபவம் விரும்பியும் முதுகலை மென்பாருள் அமைப்பு பகுப்பின் பட்டய படிப்பு Post Graduate Diploma in System Analysis (PGDipSA) சேர்ந்து வெற்றி கரமாக படித்து முடித்தேன். 2009-ம் ஆண்டு எங்கள் வாழ்வில் மறக்க முடியாத பலவித நிகழ்வுகளை பதித்து சென்றுள்ளது.



சிங்கப்பூரில் படித்து கொண்டிருக்கும் சமயத்தில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பதிவுலகம் என்று ஒன்று இருப்பது பற்றி தெரியவில்லை. யாரோ எழுதுகிறார் நாமும் பொழுது போக படிப்போம் என்று இருந்தேன். 2009 தீபாவளி சமயத்தில் தெற்காசிய பதிவுலக சாம்பவான் விக்கி (http://vaazkaipayanam.blogspot.com/ ) அன்பிற்குரிய அண்ணன் சிங்கை பதிவுலக சாஸ்திரி யூசப் அய்யங்கார் (http://www.maraneri.com/) மதிப்பிற்குரிய அண்ணன் கோவிக்கண்ணன் பெரியவா(http://govikannan.blogspot.com/) . மற்ற நண்பர்கள் அனைவரையும் சந்திக்க நேர்ந்த்து.அவர்களின் தொடர்பினால் இன்று பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். இவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் நன்றியினை பதிவிடுவது மூலம் சமர்ப்பிக்கிறேன்.



என்னைப் பற்றி விவரமான மொக்கை போதும்னு நினைக்கிறேன். ஆம் இப்ப சிங்கப்பூரில் மென்ப்பாருள் பொறியாளராதான் பொட்டித் தட்டுறேன்

சரி மற்றவை இனி வரும் பதிவுகளில்.....

மீனாட்சி சுந்தரம்