Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Monday 23 November 2009

கண்ணன் பாட்டு-1

கண்ணம்மா-என் குழந்தை
சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என் முன்னே
ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே-கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால்-கவரும்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ,-கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -உனைநோ
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?

Friday 20 November 2009

பாரதிதாசன் கவிதைகள்-2

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி

பாரதிதாசன் (இசையமுது - தமிழ்)

தமிழ் பற்றி அறிஞர்கள் சொல்லியது....

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை


திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன். - காந்தியடிகள்

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி. - அறிஞர் வின்சுலோ

தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது. மொழியறிஞர் டாக்டர் கால்டுவெல்

பாரதிதாசன் கவிதைகள்-1

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

------பாரதிதாசன் கவிதைகள்

Thursday 12 November 2009

பாரதி கவிதைகள்

திருக்காதல்


திருவே! நினைக்காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறாவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத்தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தே தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே - அதனி லுமென்
மையல் வளர்தல் கண்டாயே! - அமுதமழை
பெய்யக் கடைக்கநல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்து நிற் பேனே - அடியென்று
தேனே! எனதிரு கண்ணே - எனையுகத்து
நானே! வருந் திருப் -பெண்ணே!