Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Saturday 12 December 2009

நான் படித்த பொன்னியின் செல்வன்


நான் படித்த பொன்னியின் செல்வன்

   புதினங்கள் அனைத்தும் கற்பனை கதைகளாகவே இருக்கும் என்ற என் எண்ணத்தினை அடியோடு மாற்றியது பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம், இது வெறும் நாவலா அல்லது சோழ வரலாற்றினை பிரதிபலிக்கும் சுவடா என்றா இரண்டாம் பகுதியை மிகப் பொருத்தம். சோழ வரலாற்றின் பெருமைகளையும், அன்றைய தமிழர்களின் வாழ்வியல் நிலைகளையும், பண்பியல்களையும், மன்னர் முதல் குடியானவன் வரை அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை அழகு தமிழில் தித்திக்க பருகினேன் என்றுதான் கூற வேண்டும், வெறும் கற்பனைக்கதையை தான் படிக்க போகிறேன் என்ற எண்ணத்தில் படிக்க தொடங்கிய பொன்னியின் செல்வன் படித்து முடித்த பின்பு ஆ சோழ வரலாற்றினையே தெரிந்து கொண்டோம் என்ற ஓர் இன்ப உணர்வை ஏற்படுத்தி விட்டது.

இந்நாவலினை விமர்சிக்கும் தகுதியோ விருப்பமோ அணுவளவும் எனக்கில்லை. அத்தகைய பதிவுமன்று இது, இக்கதையில் இல்லை இல்லை இந்ந வரலாற்றில் வரும் அத்துணை பேரும் வாசகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றர்கள் என்பதில் மிகையில்லை.

இந்நாவலை படித்துக் கொண்டிருக்கும் போது ஈழப்போர் ஒருவாறு கசப்பான முடிவினை கண்டிருந்தது. அன்றயை காலக்கட்டத்தில் ஈழத்தில் இருந்த பொன்னியின் செல்வரின் மகா சைன்யத்திற்கு தஞ்சையிலிருந்து உணவுப் பண்டங்கள் அனுப்பி வைக்கப் பட்டன என்றும் அதற்கு கூட பழுவேட்டயர் ஆட்சேபம் தெரிவித்து இருந்தார் என்றும் படிக்கும் போது, இப்போதும் அத்தகையதொறு நிலையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆனால் நம் தமிழக தலைவர்களால் நம் சொந்தங்களுக்கு எதுவும் அனுப்ப இயலவில்லை ஏன் அவர்களின் கண்ணிர்த்துளிகளை கூட நமக்குத் தெரியாமல் ஊடக இருட்டடிப்பு செய்து விட்டனர், இப்போது தடுத்தது எந்த பழுவேட்டயர்களோ அதன் பின்னணி என்னவோ



சோழர் ஆட்சி முறையில் நிர்வாக கட்டமைப்பு மிக அழகாக அறிய முடிகிறது. அந்தந்த ஊர்களில் உள்ளவர்களுக்கு ஊர்ப்பிரச்சினையில் முடிவெடுக்கும் அதிகாரம், தலைமை செயலர் போன்ற முதன் மந்திரி பதவி, தானிய களஞ்சிய அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு சிற்றரசர்கள் மாவட்ட மந்திரிகள் போன்று, இன்று கறுப்புப் பூனை படை போன்று அன்றே வேளக்காரப் படை நான் இங்கு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே ஒப்பீடு செய்திருக்கிறேன்

ஆனால் ஒன்று மட்டும் சற்று வியப்பாக இருக்கிறது, தஞ்சை பழையாறையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் யாவும் காஞ்சி மற்றும் கோடிக்கரை வாழ் மக்களுக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத அக்காலத்தில் விரைவாக பரவி விடுவது சற்றே ஆச்சரியம்தான். மேலும் சில இடங்களில் ஆசிரியர் தமிழகம் என்ற வார்த்தையை கதாபாத்திரங்கள் வாயிலாக பயன்படுத்தி உள்ளார், இது குறித்து எனக்கு ஒர் விடயம் புரியவில்லை, உதாரணததுக்காக, முதல்பாகம் 5ம் அத்தியாயத்தில் குரவைக் கூத்து-ல் கந்தன்மாறன் வந்தியத்தேவனிடம் பழுவேட்டையரின் முன்னோர்கள் சேர நாட்டியிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று கூறுகிறார்கள், அன்றைய காலக்கட்டத்தில் தமிழகம் என்ற ஒருங்கிணைந்த நாடாக இருந்ததா ? அல்லது தமிழகம் என்பது சேர நாட்டினை உள்ளடக்கியது அல்லவா ?

பொன்னியின் செல்வன் பற்றி கேள்வி பட்ட போது இது ராசராசனின் ஆட்சிமுறை பற்றியோ அல்லது அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி இருக்கும் என்று நினைத்து 12-ம் வகுப்பு விடுமுறையில் கணிணியில் மென்புத்தகம் படிக்க ஆரம்பித்த போது (அப்ப கணிணி நமக்கு புதிது, சும்மா ஒரு பில்ட் அப் பண்ண படிக்க ஆரம்பிச்சோம்) என்ன முதல் சில அத்தியாயத்தில் என்ன இது ராசராசன் வரலாறு என ஆரம்பித்தால் வந்தியதேவனாம் பழுவேட்டயராம் என்று இழுத்து கொண்டே போனதாலும் அப்போது கிரிக்கெட்டில் ஆர்வ மிகுதியால் படிக்க இயலவில்லை. மீண்டும் இப்படிப்பட்ட மனதாங்கலான சமயத்தில் சற்றே மனமாற்றமாய் இருந்தது இந்த பொன்னியின் செல்வன்.


வந்தியத்தேவனின் அதிர்ஷடமும், காதல் மோகமும் சுந்தர சோழரின் வனப்பும், ஆதித்த காலனின் வீரமும், அன்பில் அநிருத்தரின் மதிநுட்பமும், சேந்தன் அமுதனின் பக்தியும், பார்த்திப்பேந்தரின் துணிச்சலும், பழுவேட்டயரின் நாட்டுப்பற்றும், ரவிதாசனின் மந்திர சக்தியும்,  ஆழ்வார்கடியானின் ஒற்றறிவும், ஆகிய அனைத்தையும் பொருந்திய பொன்னியின் செல்வர் போன்றும்

பழைய மதுராந்தகர் கோழைத்தனமும், கந்தன்மாறனின் முட்டாள்தனமும், பினாகபாணியில் பேராசையும் போன்றவை இல்லாமல் இளைஞர்களாகிய நாம் இருக்க வேண்டும்


ஒர் இடத்தில்  பொன்னியின் செல்வர் சொல்வது போல் நமக்கு பிறகு 1000 ஆண்டுகள் கழித்து வாழப்போகிறவர்கள் நினைத்து பார்க்கும்படி செயற்கரிய செயல்களை செய்ய வேண்டும் என்று நண்பர்கள் முன்னே உறுதியெடுத்து கொண்டார், அதே போன்று செய்தும் காட்டினார்,

அது போல் இல்லையென்றாலும் அத்தகைய சிறப்பு மிக்கவர்களின் வழித்தோன்றல்கள்  நாம் என்ற செய்தியையாவது 1000 வருடங்கள் வேண்டாம் அடுத்த தலைமுறைக்கேனும் எடுத்துச் செல்வோம் என்ற உறுதி எடுப்போம் இன்று.

அன்றைய காலக்கட்டத்தில் பொது நன்மையில் அக்கறை கொண்டவர்கள் அதிகம். இன்று அத்தகையோர் அதி சிறும்பான்மை. அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் பற்றி தான் நாம் 1000 ஆண்டுகள் கழித்து படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறோம்.

செம்பியன் மாதேவியின் பெருங்குணமும், வானமா தேவியின் பதிபக்தியும், வானதியின் வெட்கமும், மணிமேகலையின் மாறா அன்பும் ,பூங்குழலியின் வாய்ப்பேச்சும் துணிச்சலும், மந்தாகினியின் காதலும், நந்தினியின் மோகனப் புன்னகையும், குந்தவையின் அறிவும் நாட்டுப்பற்றும், ஆகியவை ஒருங்கே கொண்ட இளைஞிகளாக நம்மவர்கள் இருக்க வேண்டும், இத்தகையோரில் தலைசிறந்தவளை இதை எழுதுபவனை கரம் பிடிக்க வேண்டும் :-)










Saturday 5 December 2009

ஒரு பாரசீக பாடலின் கருத்து

பழுத்த ஞானியாகிய ராபிய அம்மையார் நோயில் படுத்திருந்தார், முகமதியரகளின் மதிப்பிற்குரிய புனித மாலிக்கும் அறிஞர் ஹசனும் அவரை காண வந்தனர். "துாய முறையில் பிரார்த்தனை செய்பவர்கள் இறைவன் தரும் துயரத்தை சகித்துக் கொள்வார்கள்" என்றார் ஹசன். இன்னும் ஆழ்ந்த கருத்துப்பட தன் அனுபவத்தை மாலிக் கூறினார் "இறைவன் கொடுக்கும் அனைத்தையும் தண்டனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள  வேண்டும்" என்று,
இருவரின் கருத்துக்களில் சுயநலம் இருப்பதை கண்ட ராபிய அம்மையார், "அருளாளர்களே இறைவனின் திருமுகத்தை காணும் பேறு பெற்றவர்கள் தாங்கள் தண்டிக்கப் பட்டோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார்கள் " என்றார்.
விவேகானந்தரின் ஞான தீபம் என்ற நுாலிருந்து,,